இந்தமுறை மலையாள சினிமாவுக்கு தேசிய விருது விஷயத்தில் ஏமாற்றமே மிஞ்சியது. இத்தனைக்கும் அவ்வப்போது நல்ல படங்கள் வரத்தான் செய்கின்றன. அப்படி வெளிவந்த படம்தான் டிராஃபிக்.
உடல் உறுப்பு தானத்தை மையப்படுத்தி விறுவிறுப்பாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் கமல் ஆர்வம் காட்டியதும் விஸ்வரூபம் படம் காரணமாக அது நடக்காமல் போனதும் பழங்கதை. டிராஃபிக்கின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கிய ராதிகாவின் ராடன் நிறுவனம் மலையாளத்தில் படத்தை இயக்கிய ராஜேஷ் பிள்ளையை வைத்தே படத்தை தொடங்கியது. தயாரிப்பாளர் ராதிகா என்பதால் சரத்குமாருக்கும் படத்தில் வாய்ப்பு தரப்பட்டது.
சரத்குமாருக்கு முக்கியத்துவம் தர வேண்டும், தமிழுக்கு ஏற்ப கதையை மாற்ற வேண்டும் என ராதிகா தரப்பில் சொல்லப்பட்ட மாற்றங்களை இயக்குனர் ஏற்கவில்லை. ஏற்கனவே தமிழுக்கு மாற்றுகிறோம் என்று சிந்தா நிஷ்டயாய சியாமளா - சிதம்பரத்தில ஒரு அப்பாசாமி, வடக்குநோக்கி யந்திரம் - திண்டுக்கல் சாரதி, ஆகியவற்றை குதறி வைத்தனர். அதனால் தமிழுக்காக கதையை மாற்றும் பேச்சேயில்லை என்று ராஜேஷ் பிள்ளை தெரிவித்திருக்கிறார். தயாரிப்பாளர் ராதிகாவுக்கு மாற்றியே ஆக வேண்டும்.
இந்த ஈகோ யுத்தத்தில் படம் மாட்டிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

No comments:
Post a Comment