தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாக ஒரு நாள் ஸ்ட்ரைக்கை அறிவித்துள்ளது தயாரிப்பாளர் சங்கம்.
நேற்று நடந்த தயாரிப்பாளர் சங்கக் கூட்ட முடிவில், "தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் போக்கினால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கும், தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணனுக்கும் ஆதரவு தெரிவிக்கும் விதமாக வருகிற 19-ந் தேதி (திங்கட்கிழமை) எல்லா தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும். அன்று காலை 11 மணிக்கு அனைவரும் கூடி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தங்கள் செய்கைக்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் வருத்தம் தெரிவிக்கும் வரை, ஊதிய உயர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கலந்துகொள்ளாது.
தயாரிப்பாளர் சங்கத்துக்கு எதிராக செயல்படும் இயக்குநர் அமீருக்கு இனி ஒத்துழைப்பு கிடையாது,'' என்று அறிவித்துள்ளனர்.
தனிப்பட்ட ஒரு தயாரிப்பாளருக்காக இப்படி பெரிய ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்டிருப்பதை இன்டஸ்ட்ரியே கொஞ்சம் ஆச்சரியத்தோடுதான் பார்க்கிறது.
பெப்சிக்காக பேசி வரும் அமீரை, தட்டி வைக்கும் ஒரு டெக்னிக்காக தயாரிப்பாளர் சங்கம் இதனை பிரயோகித்திருப்பதாக மீடியா வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

No comments:
Post a Comment