நடிகை ஹன்சிகா தனது சம்பளத்தை உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருகிறார். தமிழில் ஹன்சிகா நடித்தது மூன்று படங்கள் தான் என்றாலும், அந்த மூன்று படங்களும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இருந்தாலும் அம்மணிக்கு ஏகப்பட்ட வரவேற்பு. இப்போது உதயநிதி ஸ்டாலினுடன் ஓ.கே.ஓ.கே படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றனவாம்.சிங்கம் பார்ட் 2, வேட்டை மன்னன் ஆகிய படங்களில் கமிட் ஆகியிருக்கும் ஹன்சிகா, வேறு புதிய பட வாய்ப்புகளை ஏற்க மறுத்து வருகிறார். அதே நேரம் நல்ல கதையுடன் படங்கள் வந்தால் அதனை ஏற்றுக் கொள்வதோடு, கூடுதல் சம்பளம் கேட்கவும் முடிவு செய்திருக்கிறாராம்.
விஜய், தனுஷ், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்திருக்கும் ஹன்சிகாவிடம், சம்பளத்தை உயர்த்துவது தவறே இல்லை என்று சினிமா நண்பர்கள் பலரும் கூறியதால்தான் இந்த அதிரடி முடிவை எடுத்திருக்கிறாராம் ஹன்சிகா.
No comments:
Post a Comment