மலையாளம், தமிழ், கன்னடம் என தென் மொழிகளில் கவர்ச்சி காட்டி வரும் ஸ்வேதா மேனனுக்கு சிறந்த வில்லி நடிகைக்கான விருது ஆந்திராவில் கொடுக்கப்பட்டுள்ளது.
சந்தித்த வேளை படத்தில் அறிமுகமானவர் ஸ்வேதா மேனன் (சிலோனு சிங்கள பெண்ணே...). தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் நடித்தார். சமீபத்தில் வந்துள்ள அரவாணில் தாசி பாத்திரத்தில் நடித்தார்.
ஸ்வேதா மேனன் தெலுங்கில் ராஜான்னா என்ற படத்தில் நடித்திருந்தார். நாகார்ஜூனா, சினேகா போன்றோரும் இதில் நடித்துள்ளனர். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. இதில் நடித்ததற்காக ஸ்வேதா மேனனுக்கு சிறந்த எதிர் நாயகிக்கான விருது கிடைத்துள்ளது.
ஸ்வேதாவின் கவர்ச்சியும் வில்லத்தனமும் சேர்ந்து மிரட்டலாக இருந்ததாக தெலுங்கு திரையுலகினர் பாராட்டி இந்த விருதை அளித்துள்ளனர்.
ஸ்வேதா மேனன் ரதி நிர்வேதம் மலையாள படத்தில் படுகவர்ச்சியாக நடித்துள்ளார். இப் படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு விரைவில் ரிலீசாகிறது.
இந்தப் படத்துக்கு சிறந்த கவர்ச்சி நடிகை விருது கொடுத்து விடுவார்களோ!
No comments:
Post a Comment