Saturday, 17 March 2012

மீண்டும் சீனுக்கு வந்தார் சோனா

 
சோனா என்றால் எளிதாக ஹேண்டில் செய்துவிடலாம் என்று நினைக்கிறார்களா? 

முதலில் சரண் விவகாரம். சாணியை எடுத்து ஏன் முகம் துடைக்க வேண்டும் என்று அந்த விவகாரத்திலிருந்து சோனா ஒதுங்கி இருந்தார். பிறகு வெங்கட்பிரபுக்கு அட்வான்ஸ் கொடுத்தப் பிரச்சனை. அதுவும் முடிந்தால் விமான நிலையத்தில் அவர் எடுத்து வந்த உடைகளுக்கு வ‌ரி கட்ட கஸ்டம்ஸ் அதிகா‌ரிகளின் நிர்ப்பந்தம். இதோ மேலும் ஒரு பிரச்சனையில் சோனா.

அம்மா கி‌ரியேஷன்ஸ் சிவா கனிமொழி என்ற படத்தை தயா‌ரிக்கத் தொடங்கி பைனான்ஸ் பற்றாக்குறையால் சோனாவுக்கு கைமாற்றிவிட்டது தெ‌ரிந்திருக்கும். மொத்தம் மூன்று ஷோ ஓடிய அந்தப் படத்தால் சோனாவுக்கு கடும் நஷ்டம். அ‌ந்த‌ப் படத்தை சிவா சைலண்டாக தெலுங்கில் டப் செய்து வெளியிடும் வேலையில் இறங்கியிருக்கிறார். இது தெ‌ரிந்ததும் கொதித்துவிட்டார் சோனா. விதைப்பவன் ஒருவன் அறுப்பவன் இன்னொருவனா? 

No comments:

Twitter Bird Gadget