Wednesday, 21 March 2012

பாலா படத்துக்கு தலைப்பு 'பரதேசி?'

படங்களுக்கு தலைப்பு வைப்பதில் பாலாவின் பாணியே அலாதி. யாரும் எதிர்ப்ப்பார்க்காத தலைப்பை சூட்டுவது அவர் வழக்கம்.

நான் கடவுள் முடிந்த பிறகு ஒரு முறை அவரைச் சந்தித்தபோது, 'உங்க அடுத்த படம் தலைப்பு என்ன?' என்றோம்.

அவன் இவன்னு வெச்சுக்கலாமா? என்றார் தமாஷாக. சில நாட்கள் கழித்துப் பார்த்தால் அதுதான் தலைப்பு என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த முறை இன்னும் ஒருபடி மேலே போய், பரதேசி என்ற பேச்சு வழக்கு சொல்லை தலைப்பாக்க முடிவு செய்துள்ளாராம் பாலா.

மலையாளத்தில் வெளியான எரியும் பனிக்காடு என்ற நாவலை பாலா இந்த முறை படமாக்குவதாகத் தெரிகிறது. இதே தலைப்பை அவர் பயன்படுத்தக் கூடும் என சொல்லப்பட்டது. ஆனால் பாலா இப்போது தலைப்பை மாற்றுகிறாராம்.
Bala
பரதேசி என்ற பெயர் இந்த கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்று பாலா கருதுகிறாராம். பரதேசி என்றால் தமிழில் உயர்ந்த அர்த்தங்கள் உண்டு. தனக்கென ஒரு நிரந்தர இடம் இல்லாதவன், அனைத்தையும் தன் தேசமாகவே கருதுபவன் என்றெல்லாம் ஏகப்பட்ட அர்த்தங்கள். ஆனால் பேச்சு வழக்கில் இந்த சொல் இழிவாகத் திட்ட பயன்படுத்தப்படுகிறது.

இதுதான் இறுதியா என்பது உறுதியாகத் தெரியாது. பாலாவே அறிவித்தால்தான் உண்டு.

படத்தில் அதர்வா, வேதிகா ஜோடியாகவும், முக்கிய பாத்திரங்களில் பூஜா, உமா ரியாஸ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

No comments:

Twitter Bird Gadget