இன்று பிரபல ஹீரோவாக இருக்கும் லாரன்சுக்கு முதல் பிரேக் கிடைத்தது பாண்டி படத்தில். இதனை இயக்கியவர் ராசு மதுரவன். இவரும் பூ மகள் ஊர்வலம் படத்துக்குப் பிறகு பத்து பதினைந்து வருடங்கள் காத்திருந்து பாண்டியை இயக்கினார். இந்த பந்தம் இருவருக்குள்ளும் இருக்குமல்லவா.
பெரிய இயக்குனர்கள் தயாராக இருந்தும் ராசு மதுரவனுக்கு கால்ஷீட் தந்திருக்கிறார் லாரன்ஸ். இவரின் காஞ்சனா கண்டபடி ஓடியதால் இந்தப் படத்தை இப்போதே ஆவலாக எதிர்நோக்குகின்றனர்.
ராசு மதுரவனின் ஒரே பிரச்சனை தானா வரவேண்டிய சோகத்தை தட்டி பிழிய வைப்பது. விட்டால் தியேட்டர் வாசலில் அழாதவர் கண்ணில் மிளகாய் பொடி போடுவாரோ என்கிற அளவுக்கு சோகம் தாண்டவமாடும். இதை அவரும் உணர்ந்திருப்பார் போல. தற்போது இயக்கிவரும் மைக் செட் பாண்டியில் கிளிசரின் அளவை கணிசமாக குறைத்திருக்கிறாராம். காஞ்சனா கலகலப்புக்காக ஓடியது என்பதால் லாரன்ஸை வைத்து இயக்கும் படத்திலும் சோகத்தை ஜீரோ ரேஞ்சுக்கு கொண்டு வருவார் என்கிறார்கள்.
இந்தப் படத்தில் லாரன்ஸ் ஜோடியாக லட்சுமிராய் நடிப்பார் என்கின்றன முதல்கட்ட தகவல்கள்.
No comments:
Post a Comment