முருகதாஸ் இயக்கும் துப்பாக்கிப் படத்துக்குப் பிறகு கௌதம் இயக்கும் யோஹன் - அத்தியாயம் ஒன்று படத்தில் நடிக்கிறார் விஜய். இந்தப் படம் ஜேம்ஸ்பாண்ட் படங்கள் போல அடுத்தடுத்த அத்தியாயங்களாக தொடர உள்ளது.
இப்படத்தின் முக்கியமான காட்சிகள் யுகே-யில் படமாக்கப்பட உள்ளன. இதுவொரு ஆக்சன் த்ரில்லர்.
இந்தப் படத்தை கௌதமின் போட்டோன் கதாஸுடன் இணைந்து ஈராஸ் இண்டர்நேஷனல்ஸ் தயாரிக்கிறது. இவர்கள்தான் ரஜினியின் கோச்சடையான் படத்தையும் தயாரிக்கிறார்கள். ரா.ஒன் தயாரிப்பாளர்களும் இவர்களே.
இந்தப் படத்துக்காக ரஹ்மான் தீம் மியூஸிக் ஒன்றை ஏற்கனவே கம்போஸ் செய்துள்ளார். சூப்பர் என்கிறார்கள் கேட்க வாய்ப்பு கிடைத்த அதிர்ஷ்டசாலிகள்.
No comments:
Post a Comment