சென்னை: கார்த்தி பட ஷூட்டிங்கில் நான் தூண்டிவிட்டு தகராறு செய்ததாக கூறுவதில் உண்மையில்லை. வேண்டுமென்றே என் மீது பழி சுமத்துகிறார்கள். அவர் நடிக்கும் படம் எதுவென்று கூட எனக்குத் தெரியாது," என்றார் இயக்குநர் அமீர்.
கார்த்தி-அனுஷ்கா ஜோடியாக நடிக்க, கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் 'அலெக்ஸ் பாண்டியன்' படப்பிடிப்பு தொழிலாளர்கள் பிரச்சினை காரணமாக திடீரென்று நிறுத்தப்பட்டது.
இந்த பிரச்சினை தொடர்பாக ஞானவேல்ராஜா கூறுகையில், "எனக்கும், இயக்குநர் அமீருக்கும் 'பருத்தி வீரன்' படம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு இருக்கிறது. இதற்காக அவரை அழைத்துப்பேசி, பிரச்சினையை முடித்துக் கொள்ளும்படி என்னை மறைமுகமாக மிரட்டுகிறார்கள்'' என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து இயக்குநர் அமீர் கூறுகையில், "படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட விவகாரத்தில், தேவையில்லாமல் என் பெயரை இழுக்கிறார்கள்.
நாளை (இன்று) தொழிலாளர் நல ஆணையாளர் முன்பு நடைபெற இருக்கும் பேச்சுவார்த்தையில், இயக்குநர்கள், லைட்மேன்கல் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம் இறுதி செய்யப்படுகிறது.
அந்த பேச்சுவார்த்தையில் என்னை கலந்துகொள்ள விடாமல் தடுப்பதற்காக, இதெல்லாம் நடக்கிறது. கார்த்தி என்ன படம் நடிக்கிறார் என்று கூட எனக்கு தெரியாது,'' என்றார்.
No comments:
Post a Comment