பரத், சந்தியா நடிப்பில் 2004ம் ஆண்டு வெளியான படம் 'காதல்'. பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான இப்படத்தினை தயாரித்தார் இயக்குனர் ஷங்கர். ஜோஷ்வா ஸ்ரீதர் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். தமிழ் திரையுலகினர் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
பாலாஜி சக்திவேல் தன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் 'வழக்கு எண் 18/9' பத்திரிகையாளர் சந்திப்பில் 'காதல்' படத்தினைப் பற்றிய ஒரு தகவலை பகிர்ந்து கொண்டார்.
அவர் இயக்கிய 'சாமுராய்' படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் லிங்குசாமி. பாலாஜி சக்திவேல், லிங்குசாமி இருவருமே நெருங்கிய நண்பர்களாம்.
பாலாஜி சக்திவேல் முதன் முதலாக காதல் படத்தின் கதையை லிங்குசாமியிடம் கூறியிருக்கிறார். அப்போது லிங்குசாமி, தனுஷ் மும்பையில் இருக்கிறார் அவரிடம் போய் இந்த கதையை கூறுங்கள் என்று கூறி விமான டிக்கெட் முதற்கொண்டு எடுத்து கொடுத்து அனுப்பி இருக்கிறார்.
தனுஷ் கதையைக் கேட்டு பிடித்து விடவே, கண்டிப்பாக நடிக்கிறேன் என்று கூறிவிட்டு, பின்னர் சில காரணங்களால் விலகி விட்டாராம். அதன் பிறகு பரத்திற்கு கிடைத்தததாம் அந்த வாய்ப்பு.
பரத் திரையுலக வாழ்க்கையை 'காதல்' தான் திசை மாற்றியது. இந்த விதத்தில் பரத்தின் திரையுலக திருப்புமுனைக்கு தனுஷும் ஒரு காரணம்.
No comments:
Post a Comment