அதென்னமோ... சாமியார்கள், ஆசிரமம் போன்றவற்றின் மீது நடிகைகளுக்கு அலாதி ஈடுபாடு.
கிட்டத்தட்ட எல்லா நடிகைகளுமே ஏதாவதொரு காலகட்டத்தில் ஆசிரமத்துக்குப் போய் சாமியார்களுடன் போஸ் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
சமீபத்தில் கோவையில் உள்ள ஈஷா ஆசிரமத்துக்குப் போய் நீண்ட நேரம் இருந்துவிட்டு வந்தாராம் அமலா பால்.
இந்த ஆசிரமத்துக்குப் போய் வந்த பிறகு அந்த அனுபவம் குறித்துதான் அனைவரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து அமலா கூறுகையில், "ஈஷா ஆசிரமத்துக்குப் போய் நீண்ட நேரம் அங்கேயே செலவழித்தேன். அது ஒரு சுகமான அனுபவம். அந்த இடமும் சுற்றுப் புறமும் என் மனதை விட்டு நீங்க வில்லை. அந்த இடத்தை நான் காதலிக்க ஆரம்பித்துவிட்டேன்.
இனி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இந்த ஆசிரமத்துக்குப் போவேன்," என்றார்.
இதற்கு முன் ரீமா சென், ஸ்ரேயா, சோனியா அகர்வால் போன்ற நடிகைகள் இந்த ஆசிரமத்துக்கு வந்து 'ஸ்தலப் பெருமை' பாடியது நினைவிருக்கலாம்.
No comments:
Post a Comment