கழுகு படத்தை கிருஷ்ணா நம்பியிருக்கிறார் என்று சொன்னால் அது தவறு. ரொம்ப ரொம்ப நம்பியிருக்கிறார் என்று சொல்ல வேண்டும். அவர் கைவசம் இருக்கும் ஒரே படமும் இதுதான்.
வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் இந்தப் படம் ஆந்திராவுக்கு செல்கிறது. படத்தைப் பற்றிய விவரங்கள் கேட்டு படம் முடியும் முன்பே அதன் தெலுங்கு உரிமை விலை போனதாக தகவல். சுரேஷ் என்பவர் கழுகு தெலுங்கு உரிமையை வாங்கியிருக்கிறார்.
படத்தின் டப்பிங் வேலைகள் இன்னும் தொடங்காததால் அடுத்த மாதமே கழுகு தெலுங்கில் பறக்கயிருக்கிறது.
No comments:
Post a Comment