Wednesday, 21 March 2012

'வெற்றிச் செல்வன்' படப்பிடிப்பில் விபத்து: கதாநாயகன்- கதாநாயகி படுகாயம்

'வெற்றிச் செல்வன்' படப்பிடிப்பில் விபத்து: கதாநாயகன்- கதாநாயகி படுகாயம்நடிகர் அஜ்மல் கதாநாயகனாகவும், ராதிகா ஆப்தே கதாநாயகியாகவும் நடிக்கும் படம் வெற்றிச்செல்வன். இப்படத்தை ருத்ரன் இயக்கி வருகிறார். வெற்றி செல்வன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஊட்டியில் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை ஊட்டி சேரிங் கிராஸ் பகுதியில் கதாநாயகன் அஜ்மல், கதாநாயகி ராதிகா ஆப்தே ஆகியோர் ஒரு ஆட்டோவில் வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.

டைரக்டர் ருத்ரன் அக்காட்சியை எடுத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆட்டோ ரோட்டின் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. தடுப்பு சுவர் தடுக்காவிட்டால் ஆட்டோ பள்ளத்தில் உருண்டு மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும். ஆட்டோ கவிழ்ந்ததில் கதாநாயகன் அஜ்மல், காதாநாயகி ராதிகா ஆப்தே, டைரக்டர் ருத்ரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை படப்பிடிப்பு குழுவினர் மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து டைரக்டர் ருத்ரன் கூறியதாவது:-

ஊட்டியில் கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நடத்தி வருகிறோம். நேற்று கதாநாயகனும், கதாநாயகியும் ஆட்டோவில் செல்வது போன்ற காட்சியை படமாக்கி கொண்டிருந்தோம். அப்போது திடீரென ஆட்டோ தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. தடுப்பு சுவர் இல்லாவிட்டால் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும். இந்த சம்பவத்தில் இருந்து மீள வெகு நேரமாகிவிட்டது.

விபத்து ஏற்பட்ட நேரத்தில் என்ன செய்வதென்று தெரியவில்லை. ஊட்டியில் பல்வேறு இடங்களில் படப் பிடிப்பு நடத்தி உள்ளோம். பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பு அளித்தனர். இதனை மறக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Twitter Bird Gadget