Sunday, 18 March 2012

டிராஃபிக் போலீஸாக சரத்குமார்!

 

மலையாள திரையுலகினர் அனைவருமே புகழ்ந்து தள்ளிய படம் 'டிராஃபிக்'. இப்படத்தின் 100வது நாள் விழாவில் கலந்து கொண்ட கமல், இப்படத்தில் தமிழ் ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்தார்.

ஆனால், அடுத்தடுத்த படங்களுக்காக தேதிகள் ஒதுக்கி இருப்பதால் இப்படத்தின் ரீமேக்கில் இருந்து கமல் விலகிவிட்டார்.

சரத்குமார், பிரகாஷ் ராஜ், நாசர், பிரசன்னா, ராதிகா சரத்குமார் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள் என்று தகவல் வெளியானது. இப்படத்தில் முக்கிய பாத்திரமான டிராஃபிக் போலீஸாக சரத்குமார்.

மலையாளத்தில் இப்படத்தினை இயக்கிய ராஜேஷ் பிள்ளை தமிழிலும் இயக்குவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழ் ரீமேக்கில் இருந்து ராஜேஷ் பிள்ளை விலகிவிட்டார்.

இப்போது இந்தி ரீமேக்கான டிராஃபிக்கை இயக்க இருக்கிறாராம் ராஜேஷ்.

 தமிழ் ரீமேக்கை உடனே இயக்க திட்டமிட்டாராம், ஆனால் தமிழ் ரீமேக் ஆரம்பிக்க தாமதம் ஆவதால் இந்தி ரீமேக்கில் கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறார் ராஜேஷ்.

தமிழ் ரீமேக்கை ராஜேஷ் பிள்ளையிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த SHAHEED KADER  இயக்க இருக்கிறார்.

இப்படத்தினை ஸ்டீபனுடன் இணைந்து தயாரிக்க இருக்கிறார் ராதிகா சரத்குமார். 

No comments:

Twitter Bird Gadget