Thursday, 22 March 2012

நடிகை மனோரமா மருத்துவமனையில் அனுமதி

உடல்நலக் குறைவு காரணமாக மூத்த நடிகை மனோரமா இன்று சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்தவர் நடிகை மனோரமா. சில மாதங்களுக்கு முன் மூட்டு வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து அவருக்கு மூட்டு அறுவைச் சிகிச்சை நடந்தது. சிகிச்சைக்கு பின் குணடைந்தார்.

இதற்கிடையில் காளஹஸ்தி கோவிலுக்கு சென்ற போது ஓட்டல் அறையில் மயங்கி கீழே விழுந்தார். தலையில் பலத்த அடிபட்டு ரத்து கட்டு ஏற்பட்டது. 45 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் மீண்டும் உடல் நலம் தேறி வீடு திரும்பினார்.

இந்த நிலையில் மனோரமாவுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவர் நாளை வீடு திரும்பிவிடுவார் என மனோரமாவின் உறவினர்கள் தெரிவித்தனர்.

No comments:

Twitter Bird Gadget