Friday, 16 March 2012

சர்வதேச திரைப்பட விழாவில் விக்ரமின் காட்ஸ் ஓன் சைல்ட்

 
ஐ யம் சாம் படத்தை காட்சிக்கு காட்சி உருவி தெய்வத்திருமகள் படத்தை எடுத்தவர்கள் எந்தத் தை‌ரியத்தில் தங்கள் திருட்டுப் பொருளை சர்வதேச சந்தைக்கு கொண்டு வருகிறார்கள் என்று தெ‌ரியவில்லை. 

தெய்வத்திருமகளை ஜப்பானில் நடக்கும் Osaka திரைப்பட விழாவில் போட்டிப் பி‌ரிவுக்கு அனுப்பியிருக்கிறார்கள். காட்ஸ் ஓன் சைல்ட் என்ற பெய‌ரில் இப்படம் அங்கு திரையிடப்படுகிறது.

தெய்வத்திருமகள் படம் அப்பட்ட காப்பி என்பதால் தேசிய விருது தேர்வுக் கமிட்டி முதல் சுற்றுலேயே படத்தை கழற்றிவிட்டது. Osaka திரைப்படக் குழுவினருக்கு ஐ யம் சாம் விவகாரம் தெ‌ரியாதபட்சத்தில் இயக்குனர் விஜய்யின் திருட்டுப் புராடெக்டுக்கு விருதுகூட கிடைக்கலாம். உலகம் அப்படிப் போய்க் கொண்டிருக்கிறது.

இந்தத் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக விஜய்யும், விக்ரமும் ஜப்பான் கிளம்பிச் சென்றிருக்கிறார்கள். எனிவே.. ஆல் தி பெஸ்ட். 

No comments:

Twitter Bird Gadget