ஆஸ்கர் விருதுபெற்ற பெனலோப் குரூஸுக்கு இது மகிழ்ச்சியின் காலம். அவருக்கு இப்போதுதான் மகன் பிறந்துள்ளான். 36 வயதாகும் பெனலோப்பின் முதல் குழந்தை இது.
ஸ்பானிஷ் நடிகையான இவரது அம்மா ஒரு ஹோட்ரெஸ்ஸர். இதனால் எனக்கு சின்ன வயதிலேயே முடி வெட்டவும், ஹேர் கலரிங் செய்யவும் தெரியும் என்கிறார் பெனலோப். மேலும், சில நேரம் தனது முடியை தானே ட்ரிம் செய்து கொள்வாராம். நடிகையாக வெற்றி பெற்றிருக்காவிட்டால் கண்டிப்பாக ஒரு சலூன் தொடங்கியிருப்பேன் என்கிறார் ஒருவித ஏக்கத்துடன்.
இத்தனைக்கும் மேக்கப்பிற்காக கண்ணாடி முன் அதிக நேரம் செலவிடுவது அவருக்கு பிடிக்காத ஒன்று. ரெட் கார்ப்பெட் வரவேற்பு, நைட் அவுட்டிங் இந்த இரண்டுக்கும் மட்டும்தான் மேக்கப்பிற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வாராம்.
வால்வர் படத்தில் இவரது அம்மாவாக நடித்தவர் ஹேர் ட்ரெஸ்ஸராக சில காட்சிகளில் நடித்திருப்பது ஓர் எதிர்பாராத ஒற்றுமை.
No comments:
Post a Comment