Monday, 12 March 2012

மல்லிகா ஷெராவத், லட்சுமிராய் - கவர்ச்சிப் போட்டி?


லட்சுமிராயின் நீண்ட நாள் கனவு நிஜமாகியிருக்கிறது. விரைவில் இந்திப் படமொன்றில் நடிக்கிறார். அவர் பல வருடங்களாகச் சொல்லி வந்த அந்த பெ‌ரிய இந்தி வாய்ப்பு இதுதான் போலிருக்கிறது.

தமிழில் நடிக்க அழைக்கும் போதெல்லாம் துக்கடா வேடத்தில் நடிக்க மாட்டேன், இந்தியில் பெ‌ரிய வாய்ப்பு வரப்போகிறது, அப்புறம் வச்சுக்கிறேன் கச்சே‌ரியை என்று சொல்லி வந்தார் ராய். ச‌ரிதான் சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் கதை போலிருக்கிறது என்று யாரும் கண்டுக்கவில்லை. ஆனால் நிஜமாகவே பெ‌ரிய வாய்ப்புதான் சிக்கியிருக்கிறது ராயக்கு.

அங்குஷ் பட் இயக்கும் புதிய படத்தில் ராய்தான் ஹீரோயின். ஏப்ரலில் படப்பிடிப்பு தொடங்குகிறது. மல்லிகா ஷெராவத்தும் இந்தப் படத்தில் நடிக்கிறார். ராய் ஹீரோயின், மல்லிகாவுக்கு முக்கியமான வேடம் என்று ராயை விட்டுக் கொடுக்காமல் பேசியிருக்கிறார் பட். இவர்களின் கவர்ச்சிப் போட்டிக்காகவே கல்லா நிறையும்.

ஏப்ரலுக்குப் பிறகு ராயை மை போட்டுதான் பார்க்க முடியும்

No comments:

Twitter Bird Gadget