மார்ச் 15 ஆம் தேதிவாக்கில் ரஜினி லண்டன் செல்வார் என குறிப்பிட்டிருந்தோம். தேதியில் சின்ன மாற்றம். 15க்கு பதில் 21 ஃபிளைட் ஏறுகிறார் ரஜினி.
கோச்சடையானின் முதல் ஷெட்யூல் லண்டனில் பதினைந்து தினங்கள் நடக்கின்றன. அதில் கலந்து கொள்ளவே ரஜினி லண்டன் செல்கிறார். லண்டன் மற்றும் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடக்கும் எனத் தெரிகிறது. இதையடுத்து ஹைதராபாத் ஃபிலிம்சிட்டியில் இரண்டாவது ஷெல்ட்யூல் நடக்க உள்ளது.
கோச்சடையானை சௌந்தர்யா இயக்குகிறார். கதை, திரைக்கதை, வசனத்துடன் இயக்கம் மேற்பார்வை கே.எஸ்.ரவிக்குமார். ரஹ்மான் இசையமைக்க வைரமுத்து, மதன் கார்க்கி பாடல்கள் எழுதுகின்றனர்.
No comments:
Post a Comment