Saturday, 17 March 2012

'கனவுகள் மெய்ப்படும்' - இளம் வீரர்களுக்கு சச்சின் அறிவுரை

 
சாம்பியன் பேட்ஸ்மென், அனைத்து கால சிறந்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடைசியாக தனது 100வது சதத்தை எடுத்து முடித்தார். அதன் பிறகு அவர் அது பற்றி கூறுகையில் இது ஒரு கடினமான காலக் கட்டமாக தனக்கு அமைந்தது என்றார்.

இந்திய இன்னிங்ஸ் முடிந்தவுடன் பாகிஸ்தான் வர்ணனையாளர் ரமீஸ் ராஜாவிடம் அவர் பேசும்போது கூறியதாவது:

"இந்த சீசனில் எனது பேட்டிங்கை ஓரளவுக்கு சுமாராக தொடங்கினேன், எனக்கு அதிர்ஷ்டம் இல்லை, நான் எனது 100வது சதத்திற்காக மட்டும் விளையாடவில்லை, எவ்வளவு சதம் என்பது ஒரு விஷயமில்லை அனிக்காக என்ன செய்கிறோம் என்பதுதான் விஷயம்.

நான் மைல்கல்லைப் பற்றி சிந்திக்கவில்லை, ஊடகங்கள்தான் இதனைத் துவங்கியது. நான் எங்கு சென்றாலும், ஹோட்டல், உணவு விடுதி, ரூம் சர்வீஸ் என்று எங்கு பார்த்தாஅலும் 100வது சதம் பற்றியே பேசினர். ஒருவரும் எனது 99 சதங்களைப் பற்றி பேசவில்லை. யாருமே எனது 99 சதங்களைப் பற்றி பேசவில்லை என்பது எனக்கு மன ரீதியாக் அழுத்தத்தை ஏற்படுத்தியது.

இன்று இந்த சதத்தை எடுப்பதற்குள் நான் 50 கிலோ எடை குறைந்தது போல் உணர்கிறேன்.

இளைஞர்களுக்கு கூறுகிறேன், "ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் ஆடுங்கள், கனவுகளைத் துரத்துங்கள், கனவுகள் மெய்ப்படும். நான் உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல 22 ஆண்டுகள் காத்திருந்தேன்" என்றார் சச்சின். 

No comments:

Twitter Bird Gadget