முருகதாஸ் அடுத்து யாரை இயக்குகிறார்? ஷாருக்கான்... அமீர்கான்? இவர்கள் இருவரும் இல்லை, அக்சய்குமாரைதான் முருகதாஸ் இயக்கப் போகிறார்.
ரா ஒன் பிரமோஷனுக்கு வந்த ஷாருக்கான், முருகதாஸ் இரண்டு கதைகள் சொன்னார் இரண்டிலும் நடிக்க ஆவலாக இருக்கிறேன் என்றார். அது சும்மா மேடை நாகரிகத்துக்காகச் சொன்னதா என்ற ஐயம் ஏற்பட்டிருக்கிறது. காரணம் ஷாருக் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவில்லை. மாறாக அக்சய்குமார்தான் நடிக்கிறார். அதேபோல் பலரும் சொன்னது போல் ரமணா படத்தை முருகதாஸ் இந்தியில் ரீமேக் செய்யவில்லை. அவர் தேர்வு செய்திருப்பது துப்பாக்கி.
விஜய் நடிப்பில் துப்பாக்கி வேகமாக வளர்ந்து வருகிறது. ஆக்சன் படமான இதில் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்டாக விஜய் நடிக்கிறார். காஜல் ஹீரோயின். இந்தப் படத்தைதான் இந்தியில் அக்சய்குமாரை வைத்து ரீமேக் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம் முருகதாஸ்.
விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்பாருங்கள்.
No comments:
Post a Comment