Wednesday, 21 March 2012

ஆர்யாவின் 'ரகசிய' வீட்டில் நயன்தாரா!

நடிகர் நடிகையர் வாங்கும் சொத்துக்கள் பெரும்பாலும் வெளியில் தெரியாது. அப்படி வெளியில் தெரியாமல் ஆர்யா வாங்கிய வீட்டுக்கு வந்துள்ளார் நடிகை நயன்தாரா.

பிரபு தேவா விவகாரத்திலிருந்து முழுசாக வெளியில் வந்துவிட்ட நயன்தாரா இப்போது தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். முன்பெல்லாம் சென்னைக்கு வருவதற்கே பல முறை யோசித்துக் கொண்டிருந்தவர், இப்போது நினைத்தால் ஒரு முறை சுதந்திரமாக வந்து போக ஆரம்பித்துள்ளார்.

ஏற்கெனவே இரு முறை சென்னை வந்த நயன், சமீபத்தில் ஆர்யாவின் இந்த புதிய வீட்டுக்கு வந்துள்ளார். ஆர்யா வீட்டுல அப்படியென்ன விசேஷம்?

இருவரும் நல்ல நண்பர்களாம். அந்த வகையில் தன் புதிய வீட்டில் நயன்தாரா வந்து குத்துவிளக்கேற்றினால் நன்றாக இருக்கும் என விரும்பினாராம் ஆர்யா.
Arya and nayantara
விருப்பத்தை நயனிடம் சொன்னதும், அதுக்கென்ன வந்துட்டா போச்சி என அடுத்த நாளே வீட்டுக்கு வந்துவிட்டாராம் 'சேச்சி'!

இன்னும் சில நெருங்கிய நண்பர்களை மட்டும் நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தாராம் ஆர்யா. அனைவர் முன்னிலையிலும் நயன் குத்துவிளக்கேற்ற, குடித்தனத்தை ஆரம்பித்துள்ளார் ஆர்யா.

நயன், குத்துவிளக்கு, குடித்தனம் என்ற வார்த்தைகளை நீங்களாக முடிச்சுப் போட்டு புது அர்த்தம் கற்பித்துக் கொண்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல!!

No comments:

Twitter Bird Gadget