டெல்லி: இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இத்தாலிய நாட்டைச் சேர்ந்த 2 பேரை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒரிசா மாநிலத்திற்கு சுற்றுலா வந்த இத்தாலிய நாட்டைச் சேர்ந்த 2 பேரை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நேற்று கடத்திச் சென்றுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்கள் கந்தமால் மாவட்டத்தில் ஆற்றில் பழங்குடியினப் பெண்கள் குளித்துக் கொண்டிருந்தததை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்டனர் என்று கூறப்படுகின்றது. பழங்குடியினப் பெண்களைப் புகைப்படம் எடுக்க ஒரிசா அரசு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாவோயிஸ்ட் தலைவர் சபயசாச்சி பாண்டா ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள கேசட்டில் இத்தாலியர்கள் 2 பேர் கடத்தப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவித்தல், ஆபரேஷன் கிரீன் ஹன்ட்டை உடனே நிறுத்துதல் உள்பட 13 கோரிக்கைகளை முன்வைத்து அவற்றை அரசு இன்று மாலைக்குள் செயல்படுத்த வேண்டும் என்று அந்த கேசட்டில் கூறப்பட்டுள்ளது.
மாவோயிஸ்ட்கள் ஏற்கனவே மால்கங்கிரி கலெக்டர் வினீல் கிருஷ்ணாவை கடத்திச் சென்றனர். அவர்கள் வைத்த கோரிக்கைகளை ஒரிசா அரசு ஏற்றுக் கொண்ட பிறகே அவரை விடுதலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அரசு அதிகாரிகள், போலீசாரை கடத்தி வந்த நிலையில் முதன் முதலாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கடத்திச் சென்றுள்ளனர்.
No comments:
Post a Comment