காதலில் சொதப்புவது படம் மூலம் இந்திக்குப் போகிறார் நடிகை அமலா பால்.
நடிகர் சித்தார்த் நடித்து தயாரித்த படம் காதலில் சொதப்புவது எப்படி. ஆரம்பத்தில் பெரிய வரவேற்பில்லாமல் இருந்த இந்தப் படம் ஓரளவு நன்றாகவே போகிறது தமிழ் / தெலுங்கில்.
இதைத் தொடர்ந்து இந்தப் படத்தை இந்தியிலும் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இந்திப் படத்தில் சித்தார்த்தே நாயகனாக நடிப்பார் எனத் தெரிகிறது. அவருக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறாராம்.
அமலா பால் ஏற்கெனவே வேட்டை படத்தின் இந்திப் பதிப்பில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, அமலா பால் தனது சம்பளத்தை இருமடங்காக உயர்த்திவிட்டாராம். தமிழில் அடுத்த படத்துக்கு அவர் கேட்பது அரைகோடிக்கும் மேலாம்!
No comments:
Post a Comment