Thursday, 22 March 2012

இரவில் பனி பெய்வது எதனால் ?

காலையில்மரங்களும் செடி கொடிகளும் பனியில் நனைந்து ஈரமாகக் காணப்படும். இரவில்பொழிந்ததால் மரங்கள் இவ்வாறு நனை ந்திருக்கும். பனி பெய்வது எதனால் என்பதுபலருக்குத் தெரியாது.பூமியின் பரப்பில் நிகழும் உறைவித்தலால் பனி உருவாகிறது. சில சமயங்களில்இரவில் காற்றை விட பூமி அதிகமாகக் குளிர்ந்து விடுகிறது. காற்றில் உள்ளஆவி, குளிர்ந்த தரைப் பரப்பில் உள்ள இலைகள், தழைகள், பொருட்கள் ஆகியவற்றின்மீது விடியற்காலையில் படியும் போது, அது உறைந்து பனித் திவலையாகமாறுகிறது. பூமி மிகவும் குளிர்ந்து இருந்தால் ஈர ஆவி இறுகி உறை பனியாகமாறி விடுகிறது.
தரையில் இருந்து எழும் ஈர ஆவி, அதைவிட குளிர்ந்த இலையில் படுமானால், அது இறுகி வேறு வகை பனிப் படிவாக இருக்கும்.

No comments:

Twitter Bird Gadget