Thursday, 22 March 2012

கார்த்தி-யின் மூன்றாவது நாயகி

கார்த்தி-யின் மூன்றாவது நாயகி‘சகுனி’ படத்திற்கு பின் சுராஜ் இயக்கத்தில் ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்தில் நடிக்கிறார் கார்த்தி.

இப்படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். ஒருவர் அனுஷ்கா, இரண்டாவது ‘ரேணிகுண்டா’ சனுஷா, மூன்றாவதாக நிகிதா நடிக்கின்றனர்.

நிகிதா ‘குறும்பு’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதையடுத்து சத்ரபதி, வெற்றிவேல் சக்திவேல், சரோஜா, முரண் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் கார்த்தியுடன் நடிக்கும் இப்படத்தையே தான் பெரிதும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

கார்த்தி பற்றி கேட்டதற்கு, “கார்த்தி எனக்கு பிடித்த நடிகர். அவருடன் நடிப்பது மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கிறது” என்று புளங்காகிதம் அடைகிறார்.

No comments:

Twitter Bird Gadget