சில்க் கடித்த ஆப்பிளை ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து ஏலத்தில் எடுத்த கதைதான் இதுவும். உண்மையைச் சொன்னால் இதுபோன்ற விஷயத்தில்அமெரிக்கர்கள் நம்மைவிட மோசம். ஒரு நடிகையின் சொத்தை உடைக்காக சொத்தையே எழுதி வைப்பார்கள்.
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் விருது வாங்கியவர்களுக்கு இணையாக விழாவுக்கு வந்தவர்களின் உடைகளும் விவாதிக்கப்பட்டன. யார் நன்றாக உடையணிந்த நடிகை என்று இணையத்தில் வாக்கெடுப்புகூட நடத்தினார்கள். அதில் யார் வெற்றி பெற்றதோ தெரியாது. ஆனால் நடாலியா போர்ட்மேன் சரித்திரத்தில் இடம் பிடித்துவிட்டார்.
ஆஸ்கர் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை நடாலியாதான் வழங்கினார். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பல நாட்கள் உடை தேர்வு செய்தவர் கடைசி நிமிடத்தில் நியூயார்க்கிலுள்ள ரேர் வின்டேஜ் கடையின் கவுன் ஒன்றை தேர்வு செய்திருக்கிறார். இந்த கவுனை அணிந்துதான் விழாவுக்கு வந்தார் நடாலியா. கவுன் பலரை கவிழ்த்துவிட்டது.
இந்த கவுனை லண்டனை சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் 50,000 அமெரிக்க டாலருக்கு வாங்கியுள்ளார். யார்ரா அது கவுனுக்கு காசு இறைத்தவன் என்று பலர் கேட்டும் ரேர் வின்டேஜ் ஆளை சொல்வதாக இல்லை. அது ஒரு அற்புதமான உடை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து இன்னும் பலரை கவிழ்க்கும் நோக்கத்தில்தான் அது குறியாக உள்ளது.
இந்த விஷயத்தில் அமெரிக்கர்களைவிட நாம் எவ்வளவோ மேல் என்றுதான் சொல்ல வேண்டும்.
No comments:
Post a Comment