Friday, 16 March 2012

ஹாலிவுட் ஃப்ளேவ‌ரில் கமலின் விஸ்வரூபம்

 


கமலின் விஸ்வரூபம் எந்த ஹாலிவுட் படத்தின் காப்பியாக இருக்கும் என்று இணைய எழுத்தாளர்கள் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். கிடைத்த - பொய் - தகவல்களை வைத்து ஹானிபால் என்று எழுதி வருகிறார்கள். படம் வரட்டும் வச்சுக்கலாம் என கீ போர்டை பிராண்டிக் கொண்டிருக்கிறது பதிவுலகம்.

நாம் சொல்லப் போவது அதுவல்ல. விஸ்வரூபம் படத்தில் இடம் பெற்றிருக்கும் ஹாலிவுட் கலைஞரைப் பற்றியது. 

விஸ்வரூபத்தின் சண்டைக் காட்சிகளில் ஸ்பெஷல் கவனம் செலுத்தி வருகிறார் கமல். ஹாலிவுட் தரத்தில் இருக்க வேண்டுமென்றால் ஹாலிவுட் சண்டைக் கலைஞரை வரவழைப்பதுதானே ச‌ரியாக இருக்கும்? இதற்காக கமல் தேர்ந்தெடுத்த ஸ்டண்ட் இயக்குனர் Lee Whittaker. 

இவர் பியர்ல் ஹார்பர், டை ஹார்ட், ஸ்டீல், பாஸ்ட் பைவ் உள்பட ஏராளமான படங்களுக்கு ஸ்டண்ட் அமைத்திருக்கிறார். விரைவில் வெளிவரவிருக்கும் ஆபிரஹாம் லிங்கன் - வேம்பயர் ஹண்டர் படத்திலும் பணியாற்றியிருக்கிறார். இவரைத்தான் விஸ்வரூபம் படத்தில் கமல் பயன்படுத்தியிருக்கிறார். இவர் ஒரு இந்தியப் படத்தில் பணியாற்றுவது இதுவே முதல்முறை.

பெயரைப் போலவே மேட்டரும் விஸ்வரூபமாகதான் இருக்கு. 

No comments:

Twitter Bird Gadget