Thursday, 22 March 2012

த்ரிஷாவை தூக்கி எறிந்த அனுஷ்கா



கிட்டத்தட்ட 3 வருடமாக டூத் பேஸ்ட் ஒன்றின் விளம்பர தூதராக இருந்த வந்த த்ரிஷாவை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் அனுஷ்காவை சேர்த்திருக்கிறது டூத் பேஸ்ட் நிறுவனம். தமிழ், தெலுங்கில் நம்பர்-1 நடிகையாக இருந்தவர் நடிகை த்ரிஷா, இப்போது அனுஷ்கா, ஹன்சிகா, டாப்சி போன்ற நடிகைகளின் வரவால் அந்த இடத்தில் இருந்து பின்னோக்கிவிட்டார். இப்போது அனுஷ்கா இரண்டு மொழியிலும் நம்பர்-1 நடிகையாக வந்து கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் நடிகைகள் அனுஷ்கா, த்ரிஷா இடையே விளம்பர படத்தில் நடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது. த்ரிஷா, நம்பர்-1 நடிகையாக இருந்த வரைக்கும் பிரபல டூத் பேஸ்ட் விளம்பரத்தில் தூதராக கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் நீடித்து வந்தார்.

இந்நிலையில், அவர் நீக்கப்பட்டு, அந்த இடத்திற்கு அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். தமிழ், தெலுங்கில் நம்பர்-1 நடிகையாக அனுஷ்கா இருப்பதால், அவர் இந்தவிளம்பரத்தில் நடித்தால் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் விளம்பரத்தை வெளியிடலாம் என்று அந்த விளம்பர நிறுவனம் கருதுகிறது.

No comments:

Twitter Bird Gadget