லக்னோ: பிரபல நடிகர் அமிதாப்பச்சன் - மனைவி ஜெயா பச்சன் தம்பதிகளின் சொத்து மதிப்பு ரூ 493 கோடி.
டெல்லி ராஜ்யசபை தேர்தலில், உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார் ஜெயா பச்சன்.
வேட்பு மனுவுடன் அவர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் ஜெயா பச்சன் தம்பதியரின் சொத்து மதிப்பு ரூ.493.85 கோடி என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதில், ஜெயாவின் கணவர் அமிதாப்பச்சனின் சொத்து மதிப்பு, ரூ.402.21 கோடி ஆகும். ஜெயா பச்சன் பெயரில் உள்ள சொத்துகளின் மதிப்பு மட்டும் ரூ.91.64 கோடி. கடந்த 2006-ம் ஆண்டில் அமிதாப் தம்பதிகளின் சொத்து மதிப்பு ரூ.277 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜெயா பச்சனுக்கு சொந்தமான தங்க நகைகள், வெள்ளிப் பொருட்களின் மதிப்பு மட்டுமே ரூ.13.34 கோடி. ஜெயாவுக்கு டொயோட்டா குவாலிஸ் மற்றும் டொயோட்டா லெக்சஸ் ஆகிய இரு கார்களும், அமிதாப்பச்சனுக்கு 8 கார்களும், ஒரு டிராக்டரும் உள்ளதாக அந்த பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment