சென்னை: கோச்சடையான் படத்தில் முன்னிலும் துடிப்பான ரஜினியை நீங்கள் பார்ப்பீர்கள். படம் தீபாவளிக்கு வெளியாகிறது, என பேட்டியளித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
கோச்சடையான் படப்பிடிப்புக்காக இன்று அதிகாலை லண்டன் புறப்பட்ட ரஜினி, விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி:
லண்டனில் வரும் 19-ம் தேதி கோச்சடையான் படப்பிடிப்பு தொடங்குகிறது. 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும். பாடல் காட்சிகள், டாக்கி போர்ஷன் என 40 சதவீதம் ஷூட்டிங் லண்டனில். பின்னர் தமிழகத்திலும் கேரளாவிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இந்தப் படத்தில் இதற்கு முன்பு பார்க்காத புதிய, துடிப்பான ரஜினியை நீங்கள் பார்க்கலாம்.
படம் இந்த ஆண்டு கண்டிப்பாக வெளியாகிவிடும். தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளோம்," என்றார்.
ரஜினியுடன் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரும் வந்திருந்தார். அவரிடம் இந்தப் படத்துக்குப் பிறகு ராணாவா? என்று நிருபர்கள் கேட்டபோது, "ஆமாம், கோச்சடையானுக்குப் பிறகு ராணாதான். ஆனால் அதுபற்றி அந்த நேரத்தில்தான் அறிவிப்பு வரும்," என்றார் இயக்குநர் ரவிக்குமார்.
No comments:
Post a Comment