Sunday, 25 March 2012

செலீனா ஜெட்லிக்கு இரட்டைக் குழந்தை!

 

பாலிவுட் கவர்ச்சி நடிகை செலீனா ஜெட்லிக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. இரண்டுமே ஆண் குழந்தைகள். அந்தக் குழந்தைகளுக்கு வின்ஸ்டன் மற்றும் விராஜ் என பெயர் சூட்டியுள்ளனர் செலீனாவும், அவரது கணழர் பீட்டர் ஹாக்கும்.

இரண்டு குட்டிக் குழந்தைகளும் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கின்றனவாம். சொர்க்கத்திலிருந்து வந்த தேவதைகள் போல அழகாக இருக்கிறார்களாம். ஹாக் கூறியுள்ளார்.

30 வயதான செலீனாவும், அவரது கணவர் ஹாக்கும் குழந்தைகளுடன் சில நாட்களை செலவிடப் போகிறார்களாம். ஹாக், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழிலதிபர். துபாயில் வசித்து வருகிறார். மிஸ் இந்தியா பட்டம் வென்றவரான செலீனா, கட்த ஜனவரி மாதம் தனது காதலைச் சொல்லி, ஜூலையில் கல்யாணம் செய்து கொண்டார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள ஆயிரம் காலத்துப் பழமையான புத்த ஆலயத்தில் வைத்து இவர்களது கல்யாணம் நடந்தது. தற்போது துபாயில் கணவருடன் உள்ள செலீனா விரைவில் குழந்தைகளுடன் மும்பை வரவுள்ளாராம். 

No comments:

Twitter Bird Gadget