Wednesday, 14 March 2012

திருமணமாகாமலேயே கரீனா 'கர்ப்பம்'... காரணம் யார்?- இயக்குனர் விளக்கம்

 



திருமணமாகாமலேயே கரீனா கபூர் கர்ப்பமாகியுள்ளதாக சமீப காலமாக மும்பை பத்திரிகைகளில பரபரப்பாக செய்திகள் வெளியாகி வருகின்றன. 

நடிகர் சயீப் அலிகானின் காதலி கரீனா. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் கரீனாகபூர் கர்ப்பமாக இருப்பது போன்ற படங்கள் வெளியானதால் ரசிகரகள் பெரிதாக அதிர்ச்சியடையவில்லை. இதெல்லாம் சகஜம்தானே என்று அவர்கள் கருதினர். 

இதுகுறித்து நடிகை கரீனாவும் கருத்து எதுவும் கூறாத நிலையில், அவரை வைத்து படம் இயக்கும் மதுர் பண்டார்கர், இந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், "ஹீரோயின் படத்தில் கரீனாகபூர், மனிஷா கொய்ராலா உள்ளிட்ட பல நாயகிகள் நடிக்கின்றனர். நடிகைகளின் சொந்த வாழ்க்கையை இந்த படத்தில் சொல்கிறேன். இதில் கரீனா கபூர் கர்ப்பிணி வேடத்தில் நடிக்கிறார்.

அவர் கர்ப்பமாக இருப்பது போன்ற படத்தை நான்தான் இன்டர்நெட்டில் வெளியிட்டேன். அதை பார்த்தவர்கள் கரீனாகபூர் நிஜமாகவே கர்ப்பமாக இருப்பதாக தவறாக புரிந்து கொண்டு விட்டனர். இந்த கர்ப்ப செய்திக்கு ஒருவகையில் நானும்தான் காரணம்," என்றார்.

படத்துக்கு பப்ளிசிட்டி வேணும்ல! 

No comments:

Twitter Bird Gadget