Thursday, 22 March 2012

எஸ்.பி.பி.சரண் ரகசிய திருமணம்



சோனாவின் சொல்ல மறந்த கதைகள் இன்னும் ஏராளம் இருக்கும் போலிருக்கிறது. நினைத்து நினைத்து கோர்ட்டுக்கும் பொலிஸ் நிலையத்திற்கும்  அலைந்து கொண்டிருக்கும் சரணுக்கு இந்த கல்யாண செய்தி வியப்பாக இருக்கலாம். அல்லது ரிலீஃப் ஆகக் கூட இருக்கலாம். ஒருவருக்கும் தெரியாமல் ஒரு விஷயத்தை நடத்தி முடித்திருக்கிறார் எஸ்.பி.பி.சரண். கடந்த வாரத்தில் சைலண்ட்டாக ஒரு விஷயம் நடந்திருக்கிறது. நெருங்கிய உறவும், நிஜமான நட்பும் புடைசூழ தனது ரெண்டாவது திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார் எஸ்.பி.பி.சரண். இவரது முதல் திருமணம் விவாகரத்தாகி விட்டது என்பதை யாவரும் அறிவர். இந்த நிலையில்தான் சோனா விவகாரம் பெரிதாகி சரணின் சட்டையை பிடித்து சந்தியில் நிறுத்தியது. எப்படியோ அதிலிருந்து மீண்ட சரண், தனது மனதிற்கு பிடித்தவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

இந்த திருமணத்தில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி உள்ளிட்ட அவரது மங்காத்தா டீம் மட்டும் கலந்து கொண்டதாம். நோ ரிசப்ஷன், நோ ஆர்ப்பாட்டம் என்பதில் ஆரம்பத்திலிருந்தே உறுதியாக இருந்து விட்டாராம் சரண்.

No comments:

Twitter Bird Gadget