Wednesday, 14 March 2012

ஒரே மாதிரி வேணாம்.. போரடிச்சிடும்!- இனியா

Inia 

ஒரே மாதிரி வேடங்களில் நடித்தாலும், இழுத்துப் போர்த்திக் கொண்டு வந்தாலும் சினிமாவில் போரடித்துவிடும் என்று கூறியுள்ளார் நடிகை இனியா. 

பாடகசாலை என்ற படத்தில் அறிமுகமானவர் இனியா. வாகை சூடவா படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்து பாராட்டுக்களை பெற்றார். மௌன குரு படத்திலும் நல்ல பெயர்.

ஆனால் இரண்டிலுமே இவர் குடும்பப் பாங்காக நடித்திருந்தார். அடுத்து நடிக்கும் பாரதிராஜா படத்திலும் கிராமத்துப் பெண் வேடம்தான் இவருக்கு.

இந்த மாதிரி வேடங்களைத்தான் அவர் விரும்புகிறாரா என்று கேட்டபோது, "அப்படியெல்லாம் யாராவது தவறாக நினைத்துக் கொள்ளப் போகிறார்கள். நானே சொல்ல வேண்டும் என்று இருந்தேன். நல்லவேளை கேட்டுட்டீங்க. நான் எல்லா மாதிரியான வேடங்களிலும் நடிக்க விரும்புகிறேன்.

சமீபத்தில் கவர்ச்சி உடைகளில் வெளியான என்னுடைய புகைப்படங்களை பார்த்து நிறைய பேர் இனியா கவர்ச்சி வேடத்திற்கு தயாராகிவிட்டார் என கூறுகின்றனர்.

ஒரே மாதிரியான கிராமத்து கதாபாத்திரத்தில் நடிப்பதால் மக்களுக்கு அது சீக்கிரமாகவே போராடித்துவிடும். மேலும் அது மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பதால் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று அர்த்தமல்ல. தேவைப்பட்டால் கண்டிப்பாக கவர்ச்சி வேடத்தில் நடிக்க நான் தயார்," என்றார்.

கோலிவுட் படைப்பாளிகளே, மைன்ட்ல வச்சிக்கங்க! 

No comments:

Twitter Bird Gadget