Wednesday, 21 March 2012

எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கும் சட்டம் ஒரு இருட்டறை ரீமேக்கில் கார்த்திக, பியா

விஜயகாந்த் நடிப்பில் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிய படம் சட்டம் ஒரு இருட்டறை. எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கி இருந்தார்.

இப்படம் தற்போது ரீமேக் ஆகிறது. நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. கதாநாயகனாக விக்ரம் பிரபு நடிப்பார் என பேச்சு அடிபடுகிறது. இவர் நடிகர் பிரபுவின் மகன் ஆவார். தற்போது பிரபு சாலமன் இயக்கும் கும்கி படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகிகள் வேடத்துக்கு கார்த்திகா, பியா இருவரும் தேர்வாகியுள்ளனர்.

இவர்கள் கோ ஹிட் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். கார்த்திகாவும், பியாவும் சமீபத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரனை சந்தித்து இந்த படத்தில் நடிப்பது பற்றி பேசி முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

பியா இதுபற்றி கூறும்போது, சட்டம் ஒரு இருட்டறை ரீமேக்கில் நடிக்க தன்னை அணுகி பேச்சுவார்த்தை நடத்துகின்றனர் என்றார்.

இந்த படத்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் தயாரிக்க உள்ளார். புதுமுக டைரக்டர் இயக்குவார் என தெரிகிறது.

No comments:

Twitter Bird Gadget