சினிமா... இன்னும் என்னால நம்ப முடியாத கனவு! கேரளாவில் பிறந்தாலும், நான் வளர்ந்தது எல்லாம் டெல்லியில். டி.வி-யில் செய்தி வாசிச்சுட்டு இருந்த என்னை, டைரக்டர் லால் ஜோஸ், எம்.டி. வாசுதேவன் நாயர் ரெண்டு பேரும் 'நீலத் தாமரா’ படத்துல ஹீரோயின் ஆக்கினாங்க. படம் வெளியானதில் இருந்து கேரளாவில் என்னை 'குஞ்சுமாலு’ன்னுதான் கூப்பிடு வாங்க. தமிழ்நாட்டில் 'அரவான்’ ரிலீஸ் ஆனதும் என்னை 'சிம்மிட்டி’னு கொண் டாடுவீங்க!'' - கண் சிமிட்டிச் சிரிக்கிறார் அர்ச்சனா கவி. 'அரவான்’ மூலம் தமிழ் வனத்தில் உலவ வரும் கிளி!
'' 'அரவான்’ல அந்தக் காலத் தமிழ்ப் பெண்ணா நடிக்க ரொம்ப சிரமமா இருந்ததா?''
''ஆமாங்க... இவ்வளவு சிரமமா இருக்கும்னு எதிர்பார்க்கலை! 18-ம் நூற்றாண்டு கதை, ஆதிவாசிப் பெண், மதுரைப் பேச்சுனு தலைமுடியில் இருந்து கால் நகம் வரைக்கும் தலைகீழா மாற வேண்டிய ரோல். செருப்புகூட போடாம கொதிக்கிற பாறைகள் மேல் ஷூட்டிங் நடக்கும். சூட்டைப் பொறுத்துக்கிட்டு முகத்துல உணர்ச்சி காட்டி நடிக்கணும். ஏ.சி. ரூம்ல உட்கார்ந்து காம்பியரிங் பண் ணிட்டு இருந்த பொண்ணோட சினிமா கேரியர்ல இவ்வளவு சீக்கிரம் 'அரவான்’ மாதிரி ஒரு படம் கிடைச்சது.... பெரிய அதிர்ஷ்டம். 'இதுக்கு மேல சினிமாவில் நடிக்க முடியாது’ங்கிற நிலைமை எனக்கு வந்துட்டாக்கூட, எனக்கு ரொம்ப சந்தோஷம்தான். 'அரவான்’ அவ்ளோ நல்லா வந்திருக்கு. டைரக்டர் வசந்தபாலன் சாருக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சொல்லணும்!''
''ஏதேது... நீங்க கொடுக்கிற பில்ட்-அப்பைப் பார்த்தா, ஹீரோ ஆதியைவிட உங்களுக்குத்தான் படத்துல ஸ்கோப் அதிகம்போல..?''
''அட... நாங்களும் கஷ்டப்பட்டோம்தான். இல்லைனு சொல்லலை. ஆனா, ஆதி... சான்ஸே இல்லை! பெரிய மரத்துல எந்தப் பிடிமானமும் இல்லாம சரசரனு ஏறுவார். பார்க்கவே பயமா இருக்கும். எருது மேல சவாரி செய்யணும். திமிறத் திமிற ஓடுற அது மேல உக்காந்து போறது உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. பார்த்துக்கிட்டு இருக்கிற நமக்கே பதறும். ஆனா, ஆதி முகத்துல கொஞ்சம்கூடப் பயமோ, பதற்றமோ இருக் காது. படத்துல நிச்சயம் மிரட்டி எடுப்பார். அப்புறம் வசந்தபாலன் சார். பெர்ஃபெக்ஷனுக்காக அவர் கொடுக்கும் உழைப்பு இருக்கே... அவங்களுக்கு முன்னாடி எல்லாம் நாம ஒண்ணுமே இல்லை சார்!''
''முதல் படம் இவ்வளவு கண்ணியமா நடிச்சா, அடுத் தடுத்து தமிழ் சினிமாவில் உங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும்னு நினைக்கிறீங் களா?''
''நல்ல ரோல், நல்ல சினிமான்னா கிளாமர் ஒரு பிரச்னை இல்லை. இந்தப் படத்துலயே ஜாக்கெட் இல்லாமதான் நான் நடிச்சிருக்கேன். எனக்கு மஞ்சு வாரியர் மாதிரி, ரேவதி மாதிரி பேர் வாங்கணும்னு ஆசை. தமிழ்ல அப்படியான கேரக்டர்கள் கிடைச்சா, உடனே தமிழ் பேசக் கத்துக்குவேன்!''
''வேற என்ன... அர்ச்சனா கவியின் உலகத்தில் ஆண்களுக்கான இடம் என்ன?''
''ஹ்ம்ம்... ஆசிஷ். செம ஸ்மார்ட் பையன். எம்.பி.ஏ. முடிச்சிருக்கான். ரொம்ப புத்திசாலி. என்னைவிட ஒன்றரை வயசுதான் அதிகம். ஆனா, என் தாத்தா மாதிரி அதட்டி மிரட்டுவேன். இப்போதைக்கு ஆசிஷ் மட்டுமே என் உலகத்தில் உலவும் ஒரே ஆண். ஆசிஷ்... என் அண்ணன்தான்!''
No comments:
Post a Comment