Saturday, 17 March 2012

மீண்டும் சுஹாசினி - சினேகாவின் திருமண விருப்பம்

 

16 வயதில் நடிக்க வந்தவர் சினேகா. கமல் உள்ளிட்ட முக்கியமான நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்கள். விருதுகளும் கிடைத்திருக்கின்றன. புகழுக்கும் குறைவில்லை.

மே மாதம் இவருக்கும் பிரசன்னாவுக்கும் திருமணம். சினேகா போன்ற ஒரு செலிபி‌‌ரிட்டியின் திருமண ஆசை என்னவாக இருக்கும்? சந்தேகமில்லாமல் சிறந்த குடும்பத் தலைவியாக இருக்க வேண்டும் என்பதுதான். அப்புறம் நடிக்க வருவார்கள் என்றாலும் திருமணத்தின் முதல் ஆசை குடும்பத் தலைவி.

சினேகாவும் ஒரு முழுமையான குடும்பத் தலைவியாக இருக்க ‌பி‌‌ரியப்படுகிறார். இதனால் தனிக்குடித்தனம் சென்று கணவருக்கு தேவையான அனைத்தையும் தானே செய்துத்தர ஆசைப்படுகிறாராம். சுருக்கமாக சினிமாவுக்கு வரும்முன் சாதாரண சுஹாசினியாக எப்படி இருந்தாரோ இப்படி இருக்க விரும்புகிறார்.

ஆசை அறுபது நாள்... இருந்துட்டுதான் போகட்டுமே. 

No comments:

Twitter Bird Gadget