உதயநிதி ஸ்டாலின், சந்தானம், ஹன்சிகா மற்றும் பலர் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் 'ஒரு கல் ஒரு கண்ணாடி'. ராஜேஷ் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் இளைஞர்களிடையே வரவேற்பை பெற்று இருக்கிறது. அதனால், படக்குழு தற்போது பெரும் உற்சாகத்தில் இருக்கிறது.
படத்தில் காதலில் தோல்வியடைந்த இளைஞர்களுக்காக நா.முத்துக்குமார் பாடல் ஒன்றை எழுதி இருக்கிறார். இளைஞர்கள் மத்தியில் தற்போது அப்பாடல் தான் ஹைலைட்.
அப்பாடல் வரிகள் :
வஞ்சிரம் மீனு வவ்வாலு
கெடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை எராலு
எறங்கி கலக்கு கோபாலு..!
வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாட்டரு..!
கடல போல காதல் ஒரு சால்ட் வாட்டரு
அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டுடு...!
மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்ச்சர் இல்லடா..!
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டுனா டவுசர் அவுருண்டா..!
கண்ண கலங்க வைக்கு பிகரு வேணாண்டா - நமக்கு
கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதுண்டா..!
பைக்குல தினமும் ஒன்னா போனோம்
பேக்குல இப்போ அவள காணோம்..!
பீச்சுல சொகமா கடல போட்டோம்
கடலுக்கும் இப்போ கண்ணீர் முட்டும்..!
காதலிக்கும் போது அட கண்ணு தெரியாது
உன் கண்ணு முழிச்சுக்கிட்டா அங்க காதல் கிடையாது..!
அவ போனாளே போனா தண்ணீர விட்டு மீனா... நான்
காயம் பட்ட மைனா இப்போ பாடுறேன் கானா..!
பிகரு சுகரு மாதிரி
ஜனக்கு ஜனக்கு வவ்வாளு..
நட்பு தடுப்பு ஊசிடா
ஜனக்கு ஜான கோபாலு
பிகரு சுகரு மாதிரி
பசங்க ஒடம்ப உருக்கிடும்
நட்பு தடுப்பு ஊசிடா
ஒடைஞ்ச மனச தேத்திடும்..!
பாதியில் வந்த பொண்ண நம்பி
ஆதியில் வளர்ந்த நட்ப விட்டேன்..!
தேதிய போல கிழிச்சுப் புட்டா
தேவதை அவளை நம்பி கெட்டேன்..!
தோலு மட்டும் வெள்ள உன்ன கவுத்துப் புட்டா மெல்ல
என்ன பண்ணி என்ன அட அப்பவே நான் சொன்னேன்..!
அவ போட்டாளே போட்டா நல்ல திண்டுக்கல்லு பூட்டா
ஒரு சாவி கொண்டு வாடா என்ன தொறந்து விடேண்டா..!
கண்ணுல மைய்ய வெப்பாடா
அதுல பொய்ய வெப்பாடா
உதட்டில் சாயம் வெப்பாடா
உனக்கு காயம் வெப்பாடா
கண்ண கலங்க வைக்கு பிகரு வேணாண்டா - நமக்கு
கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதுண்டா..!
No comments:
Post a Comment