சிம்பு நடிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் படம் ' போடா போடி '. வரலெட்சுமி சரத்குமார் இப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆகிறார்.
தரண் இசையமைக்க, விக்னேஷ் இயக்கி வருகிறார். படப்பிடிப்பு முழுவதுமே லண்டனில் நடத்தி இருக்கிறார்கள். படத்தின் கதைக்கு ஏற்ப, லண்டனில் குறிப்பிட்ட பருவ காலத்தில் மட்டுமே படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள்.
மேலும் ஒரு குழந்தையை பிறந்த உடனேயும் அதே குழந்தை 6 மாதங்கள் கழித்தும் இப்படத்தில் நடிக்க வேண்டியிருந்ததால்தான் தயாரிப்பில் சிறிது தாமதமாகிக் கொண்டிருப்பதாகத் தயாரிப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
LOVE ANTHEM பணிகளை முடித்து விட்டு சிம்பு சென்னை திரும்பி இருப்பதால், படப்பணிகளில் ஈடுபட இருக்கிறார். மார்ச் 20ம் தேதி முதல் MACAU- வில் போடா போடி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
இப்படப்பிடிப்போடு படத்தின் அனைத்து காட்சிகளும் முடிகின்றன. இறுதிகட்ட பணிகள் அனைத்தும் முடித்து, படத்தினை கோடை விடுமுறைக்கு வெளியிடலாம் என்று தீர்மானித்து இருக்கிறார்களாம்.
சிம்பு நடித்து வரும் படங்களில் ' போடா போடி ' இறுதி கட்டத்தினை எட்டி இருக்கிறது. ' வேட்டை மன்னன் ' மற்றும் தொடங்க இருக்கும் 'வடசென்னை' ஆகிய படங்களுக்கு எப்போது தேதிகள் ஒதுக்க போகிறாரோ?!
No comments:
Post a Comment