Sunday, 11 March 2012

காதலிக்க ஆசையா இருக்கு!


மிழ்நாட்டைத் தகிக்கவைத்த தமன்னா, இப்போது ஆந்திரத்தில் மையங்கொண்ட புயலாக மாறிவிட்டார். மீடியா ஆட்களிடம்கூட 'டச்’ இல்லாமல் 'நாட் ரீச்சபிள்’ எல்லையில் இருப்பவரை ஏழு மொபைல், நாலு இ-மெயில் தாண்டிப் பிடித்தேன்...
 ''இப்படியா தேட வைப்பீங்க உங்களை?''
''தேடப்படுறது நல்ல விஷயம்தானே... தெலுங்குல ரொம்பவே பிஸி. ராம்சரண் தேஜா, பிரபாஸ், ராம்னு எல்லா யங் ஹீரோக்களுடனும் படம் பண்ணிட்டு இருக்கேன். இதெல்லாம் முடிஞ்ச பிறகுதான் சென்னைக்கு ஃப்ளைட் பிடிக்க முடியும். தமிழ்ல மறுபடி தமன்னா அலை அடிக்கும்!''
''ஆனா, இங்கே அதுக்குள்ள அமலா பால், ஹன்சிகா, காஜல் அகர்வால்னு உங்களுக்கு நிறைய போட்டியாளர்கள் வந்துட்டாங்களே?''
''போட்டி இருந்தா நல்லதுதானே? நடிப்பு, டான்ஸ்னு எல்லாரும் ரொம்பவே நல்லா பண்றாங்க. நானும் இப்போ முன்னாடி மாதிரி இல்லை. நிறைய புது விஷயங்கள் கத்துட்டு இருக்கேன். மோதிப் பார்க்கலாம்.ஆனா, காஜல், சமந்தா, ஸ்ருதி, வேதிகா, பூனம் பாஜ்வானு எல்லாருமே என் ஃப்ரெண்ட்ஸ்தான். இருந்தாலும் நட்பு வேற... போட்டி வேற. அதுல எல்லாருமே தெளிவா இருக்கோம்!''
''ஜீவா நடிக்கப்போற படத்துல த்ரிஷா ஹீரோயின். நீங்க செகண்ட் ஹீரோயின்னு சொன்னாங்க... உண்மையா?''
''அந்தப் படத்தோட கதை கேட்டேன். என் கேரக்டருக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. அதனால 'ஸாரி’ சொல்லிட்டேன்!''
''இன்னுமா நீங்க யாரையும் காதலிக்கலை?''
''காதலிக்க ஆசையாத்தான் இருக்கு. ஆனா, நேரம்தான் இல்லை. சொல்லப்போனா, வரப்போற கணவர் எப்படி இருக்கணும்னு யோசிச்சதுகூட இல்லை. சரியான நேரத்துல... எல்லாம் சரியா நடக்கும்னு நம்பிக்கை இருக்கு. பார்ப்போம்!''
''திருப்பதி கோயிலுக்குப் போன உங்களை உள்ளே விடலையாமே... என்ன ஆச்சு?''  
''ஹைதராபாத் ஷூட்டிங்ல திடீர்னு பிரேக் கிடைச்சது. உடனே கோயிலுக் குப் போலாமேனு தோணுச்சு. ஜீன்ஸ், டி-ஷர்ட்ல உடனே கிளம்பிட்டேன். ஆனா, மாடர்ன் டிரெஸ்ல  கோயிலுக் குள் அனுமதி இல்லைனு சொல்லிட் டாங்க.
இத்தனைக்கும் மேல ஷால் போட்டிட்ருந்தேன். கோயில் விதி களை மதிக்கணும்னு பேசாம வந்துட் டேன். அப்புறம் சல்வார் போட்டுட்டு கோயிலுக்குப் போய் வந்தேன்!''
''பிறந்த நாளுக்கு தனுஷை வரவெச்சு ஆட்டம் பாட்டம்னு தூள் கிளப்பிட்டீங்கபோல..?''
''அது ரொம்ப யதார்த்தமா அமைஞ்சது. தனுஷோட சேர்ந்து கொல வெறிப் பாட்டுக்குப் பாடி ஆடி... மறக்க முடியாத பிறந்த நாள். 'வேங்கை’ படத்துல நடிக்கும்போதே தனுஷ் மியூஸிக்பத்தி நிறைய பேசிட்டு இருப்பார். இப்போ தேசிய விருது வாங்கிட்டார். இன்டர்நேஷனல் அளவுல பிரபலம் ஆகிட்டார். சச்சினுக்கு ஆல்பம் பண்றார். கலக்குறீங்க தனுஷ்!''

No comments:

Twitter Bird Gadget