'ஹேப்பி ஹஸ்பன்ட்' என்ற மலையாள படத்தில் ஜெயராம், பாவனா இணைந்து
நடித்துள்ளனர். இப்படம் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இப்படத்தில்
ஜெயசூர்யா, இந்திரஜித், சம்விருதா, சுனின், ரீமா கல்லிங்கல் ஆகியோரும்
நடித்துள்ளனர்.
இப்படத்தை சாஜி சுரேந்திரன் இயக்கினார். மிலன் ஜலில் தயாரித்தார். 'ஹேப்பி
ஹஸ்பண்ட்' படம் இந்தியில் வெளியான 'நோ என்ட்ரி' படத்தின் கதை என குற்றம்
சாட்டப்பட்டு உள்ளது. அந்த படத்தின் கதையை திருடி படமாக்கிவிட்டதாக ஜெயராம், பாவனா,
ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர் மீது
'நோ என்ட்ரி' படக்குழுவினர் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
சாஜி சுரேந்திரன் இதனை மறுத்துள்ளார். இந்தி படத்தை காப்பி அடிக்கவில்லை
என்றும் நான் சொந்தமாக உருவாக்கிய கதை என்றும் கூறி உள்ளார். 'ஹேப்பி ஹஸ்பன்ட்' கதை
தமிழில் ரிலீசான 'சார்லி சாப்ளின்' படத்தின் தழுவல் என்றும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment