Thursday, 22 March 2012

பட்டையை கிளப்பும் Thalapathy Anthem

சிம்புவின் Love Anthem, தனுஷின் Sachin Anthem ஆகியோரைத் தொடர்ந்து தற்பொழுது விஜய்க்கும் Thalapathy Anthem உருவாகி உள்ளது. Thalapathy Anthem என்ற பெயரில் உருவாகி இருக்கும் இந்த ஆல்பத்தை எங்கேயும் எப்போதும் படத்தில் பேருந்தில் இளம் பெண்ணை காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்த வாட்சன் உருவாக்கி இருக்கிறார்.

விஜய்க்கு Anthem உருவாக்கியது ஏன்? என்பது குறித்து வாட்சன் கூறுகையில், விஜய் தான் எனக்கு மிக பிடித்தமான நடிகர். அவருடைய நடிப்பு, ஸ்டைல், நடனம் எல்லாமே எனக்கு பிடிக்கும்.

அவருக்காக ஒரு ஆல்பம் உருவாக்க வேண்டும் என்பது என்னுடைய ரொம்பநாள் ஆசை. அதன்படி இந்த ஆல்பத்தை உருவாக்கினேன். தற்போது யூடியூப்பில் இந்த ஆல்பம் வெளியாகி இருக்கிறது.

கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த ஆல்பத்தை பார்த்து ரசித்து இருக்கிறார்கள். மேலும் இந்த ஆல்பத்தை பார்த்து விஜய் சாரும் என்னையும் எனது குழுவையும் அழைத்து பாராட்டினார்.

அவர் அழைத்து பாராட்டியது ரொம்பவே மகிழ்ச்சி அளிப்பதாக கூறியிருக்கும் வாட்சன், இப்போது ஒரு பாட்டு தான் வெளியிட்டு இருக்கிறோம். இனி தொடர்ந்து இரண்டு, மூன்று பாடல்களை வெளியிட உள்ளோம் என்று கூறியுள்ளார்.

No comments:

Twitter Bird Gadget