போடா போடி படத்தைப் பற்றி இரண்டு வருடங்களாக எழுதி வருகிறோம். இன்னும் படம் திரைக்கு வந்தபாடில்லை. எல்லாம் சிம்புவின் பிஸி ஷெட்யூல்.
வானம், ஒஸ்தி என்று அடிக்கடி ட்ராக் மாறியதில் போடா போடி கிளம்பிய இடத்திலேயே இருக்கிறது. அவ்வப்போது சிம்பு கனவிலிருந்து விழித்தெழும் போது போடா போடிக்கு தற்கால விமோசனம் கிடைக்கும்.
வரும் 20ஆம் தேதியிலிருந்து போடா போடி படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். இது படத்தின் கடைசி ஷெட்யூலாக இருக்கும் என்றொரு சந்தோஷ செய்தியும் இருக்கிறது. 20ஆம் தேதிக்கு பிறகே எதையும் உறுதியாக கூற முடியும். சரத்குமாரின் மகள் வரலட்சுமி இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறார் என்பது முக்கியமானது.
No comments:
Post a Comment