Thursday, 15 March 2012

21 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி பாடிய பாட்டு - ஏ ஆர் ரஹ்மான் பதிவு செய்தார்!

Rajini sings for Kochadaiyaan   

21 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையில் பின்னணி பாடினார். இந்த முறை கோச்சடையான் படத்துக்காக அவர் பாடினார்.

1991-ம் ஆண்டு மன்னன் படத்தில் அடிக்குது குளிரு... என்ற பாடலை எஸ் ஜானகியுடன் இணைந்து பாடினார் ரஜினி. அந்தப் பாடலுக்கு இசை இளையராஜா.

இத்தனை ஆண்டுகளில் பல முறை அவரை பாடுமாறு பல இசையமைப்பாளர்கள் வற்புறுத்தியும் சம்மதிக்காமல் இருந்தார் ரஜினி. இப்போது மீண்டும் ரஜினி தனது அடுத்த படமான கோச்சடையானுக்காகப் பாடியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை நடந்த இந்தப் பாடல் பதிவின்போது இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், பாடலை எழுதிய கவிஞர் வைரமுத்து, இயக்குநர் சௌந்தர்யா ஆகியோர் உடனிருந்தனர்.

மிக மகிழ்ச்சியுடன் இந்தப் பாடலை அவர் பாடிக் கொடுத்ததாக இசையமைப்பாளர் ரஹ்மான் தெரிவித்தார். 

No comments:

Twitter Bird Gadget