Wednesday, 21 March 2012

கோலிவுட் திரும்பும் ஐடியா இல்லை! - அசின்


இப்போதைக்கு தமிழ் சினிமாவுக்கு திரும்பும் ஐடியாவே இல்லை என்கிறார் நடிகை அசின்.
Asin
கோலிவுட்டில் முன்னணியிலிருந்து, பாலிவுட்டுக்குப் போய் ஒரே படத்தில் உச்சத்துக்குப் போய், அடுத்த படத்தில் விழுந்தவர் அசின்.

பாலிவுட் புறக்கணித்ததால் மீண்டும் தமிழில் விஜய்யுடன் நடித்தார். ஆனால் மீண்டும் பாலிவுட் வாய்ப்புகள் வரத் தொடங்கியதும், தமிழில் நடிப்பதில்லை என முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "முன்பு நான் பாலிவுட்டுக்கு அந்நியமாக இருந்தேன். அதனால்தான் சரியான இடம் கிடைக்கவில்லை.

இப்போது நான் பாலிவுட்டில் ஒருத்தியாகிவிட்டேன். அந்த மொழியும், உடையும், ஸ்டைலும், கலாச்சாரமும் இப்போது எனக்குப் பழகிவிட்டது.

இனி அடுத்தடுத்த இந்திப் படங்களில் நானே சொந்த குரலில் பேச உள்ளேன். படங்களும் கணிசமாக கைவசம் உள்ளன. இன்றைய தேதிக்கு நான்கு பெரிய படங்களில் நடிக்கிறேன். தமிழில் நடிக்கக் கூடாது என்றில்லை... ஆனால் பாலிவுட்டில் செட்டிலாகி இருக்கிறேன். அங்கு என் இடத்தை உறுதிப் படுத்திக் கொண்டு, நல்ல கதைகள் கிடைத்தால் மட்டும் தமிழில் பண்ண யோசிப்பேன்," என்றார்.

No comments:

Twitter Bird Gadget