கொலவெறி... என்ற ஒரேயொரு பாடலால் உலகமெங்கும் பிரபலமாகி, பிஸினஸில் எக்கச்சக்க
பணத்தையும் தனுஷுக்கு ஏகப்பட்ட வாய்ப்பையும் அள்ளிக் கொட்டிய '3' வரும் மார்ச்
30-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
தனுஷ் - ஸ்ருதி ஹாஸன் நடித்துள்ள இந்தப் படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தயாரித்துள்ளார்.
ரஜினி குடும்பத்துக்கு மிக நெருங்கிய உறவுக்கார இளைஞர் அனிருத் இசையமைத்துள்ளார். பாடல்கள் அனைத்தையும் தனுஷே எழுதியுள்ளார்.
கொலவெறி பாடலுக்கு கிடைத்த பெரும் புகழும் வரவேற்பும், தனுஷுக்கு இந்திப் பட உலகில் பெரும் வரவேற்பைக் கொடுத்துள்ளது. அவர் இப்போது ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஒரு இந்திப் படத்தை இயக்குகிறார்.
படத்தின் வெளியீட்டு உரிமை பெரும் விலைக்குப் போயுள்ளது. ரஜினி படங்கள் தவிர வேறு எந்த நடிகர் படத்துக்கும் கிடைக்காத அளவு பிறமொழி உரிமைக்கான விலை 3-க்கு கிடைத்துள்ளது.
சென்னையில் திரையுலகினருக்காக படத்தின் சிறப்புக் காட்சிக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.

No comments:
Post a Comment