அஜீத் நடிக்கும் பில்லா 2 படத்தின் தொலைக்காட்சி உரிமையை பெரிய விலைக்கு வாங்கியுள்ளது சன் டிவி என செய்திகள் வெளியாகியுள்ளன.
அஜீத் - பார்வதி ஓமனக்குட்டன் நடிப்பில், சக்ரி டோலெட்டி இயக்கியுள்ள பில்லா 2 படம் வரும் கோடையில் வெளியாகிறது.
இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது. இதுவரை அஜீத் படம் எதுவும் இந்த அளவு விலை போனதில்லை என்று கூறும் வகையில், ரூ 6.25 கோடிக்கு இந்தப் படம் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் உலக வெளியீட்டு உரிமை, இந்திய வெளியீட்டு உரிமைகளைப் பெற முன்னணி நிறுவனங்கள் போட்டியிடுகின்றனவாம். யாருக்கு இந்த உரிமை தரப்படும் என்பது இரண்டொரு நாளில் தெரியும்.
ஏற்கெனவே வெளியாகி வெற்றி பெற்ற பில்லா படத்தின் முன் பாகமாக பில்லா 2 எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment