Thursday, 15 March 2012

வினோத்குமார் தற்கொலை விவகாரம்: முன்ஜாமீன் கேட்கிறார் அல்போன்சா!

Alphonsa 

சென்னை: நடிகர் வினோத்குமார் தற்கொலை விவகாரத்தில் முன் ஜாமீன் கேட்டு நடிகை அல்போன்சா மனு தாக்கல் செய்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் புதுப்பட்டியை சேர்ந்த நடிகர் வினோத்குமாரும் ஏற்கெனவே திருமணமான அல்போன்சாவும் தாலிகட்டாமலேயே சேர்ந்து வாழ்ந்தனர்.

இந்நிலையில், கடந்த 5ம் தேதி இரவு அல்போன்சாவின் அறையில் வினோத்குமார் தூக்கில் தொங்கி இறந்து கிடந்தார்.

இதையடுத்து, அல்போன்சாவும் அதிகமாக தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகுமாறு அல்போன்சாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். இதையடுத்து, முன் ஜாமீன் கோரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் அல்போன்சா மனு தாக்கல் செய்தார்.

இதில், "வினோத்குமார் தான் நடித்த திரைப்படம் வெளியில் வராததால் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தார். வேறு படங்களிலும் வாய்ப்பு வராதது அவரது மன அழுத்தத்தை அதிகரித்தது.

இந்நிலையில், கடந்த 5ம் தேதி நான் பாத்ரூம் சென்றபோது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது சாவில் எந்த மர்மமும் இல்லை. தற்கொலையில் எனக்கு தொடர்பும் இல்லை. என்னை இந்த வழக்கில் விசாரணைக்காக விருகம்பாக்கம் போலீசார் அழைத்துள்ளனர்.

அப்போது, என்னை கைது செய்ய நேரிடலாம். எனவே எனக்கு முன் ஜாமீன் தரவேண்டும்," என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. அல்போன்சாவின் தம்பி ராபர்ட்டும் முன் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுக்கள் இன்று முதன்மை செஷன்ஸ் நீதிபதி கலையரசன் முன்பு விசாரணைக்கு  

No comments:

Twitter Bird Gadget