பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வழக்கு எண் 18/9 அடுத்த மாதம் வெளியாகிறது.
சாமுராய், காதல், கல்லூரி என ரசிகர்களால் மறக்க முடியாத படங்களை இயக்கியவர் பாலாஜி சக்திவேல்.
கல்லூரி படத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட 4 வருட இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்கத்தில் புதிய படம் வருகிறது.
இந்தப் படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்களே நடித்துள்ளனர். ஸ்ரீ, ஊர்மிளா மஹந்தா, மிதுன் முரளி, மனீஷா யாதவ், முத்துராமன் என பலரும் புதிய முகங்களே.
விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்ய, பிரசன்னா இசையமைத்துள்ளார்.
இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியாவும் யுடிவியும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் பாடல் வெளியீடு இன்று சென்னை பிரசாத் லேபில் நடந்தது.
விழாவில் பேசிய இயக்குநர் பாலாஜி சக்திவேல், "இந்தப் படத்தின் கதையை பல ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கி விட்டாலும், முதல் காட்சி எது என்பதை தீர்மானிக்க முடியாமல் இருந்தேன். ஆனால் அதைப் பற்றி யோசிக்காமல், எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து படத்தை எடுக்க அனுமதித்தார் தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு நன்றி," என்றார்.
"நான் எடுக்கவிரும்பிய படம் இதுதான்," என்றார் பின்னர் பேசிய லிங்குசாமி.
No comments:
Post a Comment